×

தொழில்நுட்பம் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய ரோல்ஸ் ராய்ஸ்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து, அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: வளர்ந்து வரும் மற்றும் ஆழ்நிலை தொழில்நுட்பம் மீது கவனம் செலுத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த மே 15ம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட புத்தாய்வு மையமான தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வழிகாட்டுதலின் கீழ், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளர் குமரகுருபரன் தலைமையில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன், ஆராய்ச்சி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அந்தவகையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தில் அறிவுசார் பங்குதாரர் என்ற அடிப்படையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நீடித்த தன்மை கொண்ட வளர்ச்சிக்கு உதவும் மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தொழில்நுட்பம் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய ரோல்ஸ் ராய்ஸ்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rolls-Royce ,Tamil Nadu ,Govt. ,CHENNAI ,IT Department of Tamil Nadu ,Rolls Royce ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...